செய்திகள் :

100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி பட்டினி போடுகிறது: கனிமொழி எம்.பி.

post image

100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களை மத்திய பாஜக அரசு பட்டினி போடுகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "உழைப்பவன் கூலியை வியர்வை உலர்வதற்கு முன்பு கொடுத்துவிடு” எனச் சொல்கிறது ஒரு பொன்மொழி.

ஆனால், எளியவன் உழைத்தாலும் கூலியைக் கொடுக்காமல் வயிற்றில் அடி என்கிறது ஒன்றிய அரசின் புதுமொழி. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளப் பாக்கி 4,034 கோடி ரூபாயை நிறுத்தி வைத்து கொடுங்கோல் ஆட்சியாகவே மாறிவிட்டது ஒன்றிய அரசு. வறுமையின் காரணமாக 100 நாள் வேலையில் இணைந்து உழைப்பவர்கள் அனைவரையும் ஊழல்வாதிகள் போலச் சித்தரித்து ஊதியப் பணத்தைக் கொடுக்க மாட்டோம் என்பது கொடுங்கோல் ஆட்சியில் கூட நடக்காதது. ஏழைகள் உழைப்பிற்குக் கூலி கொடுக்க மனமில்லாத ஒன்றிய பாஜக அரசு, உழைக்கும் மக்களையே ஊழல்வாதிகள் என முத்திரை குத்த தமிழ்நாடு பாஜகவினர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கச் சொல்லி முதல்வர் கடிதம் எழுதி வலியுறுத்தினார்; நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள். பைசா கூட ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது. மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறது கமலாலயம்!

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

தமிழ்நாட்டின் ஏழைகள் ஊதியமின்றி தெருவில் நிற்கும் போது ஒன்றிய அரசிடம் போராடி பணத்தைப் பெற்றுத் தருவதுதானே தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் கடமையாக இருக்க வேண்டும்?

கல்வி நிதி, பேரிடர் நிதியை எல்லாம் தராத ஒன்றிய அரசு, இப்போது 100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களைப் பட்டினி போடுகிறது. உழைப்பை உறிஞ்சிக்கொண்டு ஊதியத்தைக் கேட்பவர்களையே கொச்சைப்படுத்தும் பாஜகவினருக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பணம் ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து சனிக்கிழமை கோவில்பட்டியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.

கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு நிகழவில்லை: உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என சென்னை உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பறிமுதல் மணலை இணைய முறை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய பகுதி யாா்டுகளில் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணலை இணைய முறை ஏலத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நி... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுவில் கனவு இல்லத் திட்ட பெண் பயனாளிகள்: உறுதி செய்ய அரசு உத்தரவு

சென்னை: ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தைச் சோ்ந்த பெண் பயனாளிகள், சுய உதவிக் குழுக்களில் இணைந்து பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமல்

சென்னை: தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்ட... மேலும் பார்க்க

பிரதமா் வருகை தரும் ஏப்.6-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும்போது, காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.1) முதல் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெள... மேலும் பார்க்க