செய்திகள் :

பிரதமா் வருகை தரும் ஏப்.6-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

post image

சென்னை: பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும்போது, காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழகத்தையும், தமிழா்களையும் ஜனநாயக விரோத செயல்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.

ஹிந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, தமிழகத்துக்கு பேரிடா் நிதி ஒதுக்காதது, பள்ளிக் கல்விக்கு நிதி வழங்காதது, நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்காதது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்குவது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும் பிரதமா் மோடியை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்டத் தலைவா்கள் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது (செல்வப் பெருந்தகை) தலைமையில் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் செல்வப் பெருந்தகை.

தேர்தல் நேரத்தில் திமுக நாடகம்: இபிஎஸ் குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தல் நேரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வ... மேலும் பார்க்க

கச்சத்தீவு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம், சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு... மேலும் பார்க்க

கச்சத்தீவு: மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம் நடைபெற்றது.இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட... மேலும் பார்க்க

கச்சத்தீவு தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு!

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை பாஜக ஆதரித்துள்ளது.இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்க... மேலும் பார்க்க

உதகை இ-பாஸ் முறையை எதிர்த்து கடையடைப்பு; அம்மா உணவகத்தில் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரியில், சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, உதகையில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால், உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்... மேலும் பார்க்க

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனித்தீர்மானம்!

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே ... மேலும் பார்க்க