தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரர்: வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு!
மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரருக்கு வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரத்தைச் சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் அங்குள்ள மாமூ பஞ்சா பகுதியில் கடை வைத்துள்ளார். அந்தப் பகுதியில் ஹிந்து - முஸ்லிம் சமூக மக்கள் கலந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 27 அன்று சுனில் ரஜனி அங்குள்ள மசூதியில் தனது முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து தொழுகையில் கலந்துகொண்டார். இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவின் தலைவரான மோனு அகர்வால் என்பவர், சுனில் ரஜனி ஹிந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரை கோவிலில் வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் மோனு அகர்வால் கூறினார்.
ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி ஹிந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்துள்ளனர்.
இதுதொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.