தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
ஹரியாணா: தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்
குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின.
ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விரைவில் அப்பகுதியில் உள்ள மற்ற குடிசைகளுக்கும் பரவியது. தீயில் பல சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின.
உடனே அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். நான்கு தீயணைப்பு வாகனங்கள் முதலில் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
பின்னர் அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
சுமார் 2 மணி நேரம் போராடி அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரர்: வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு!
மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி கூறுகையில், தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் குடிசைகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின.
மினி கேஸ் சிலிண்டர்களில் ஏற்பட்ட வெடிப்புகள் மற்றும் காலையில் பலத்த காற்று காரணமாக, குடிசைகளில் தீ வேகமாக பரவியது. தீ விபத்தில் சுமார் 100 குடிசைகள் எரிந்து நாசமாகின என்று தெரிவித்தார்.