செய்திகள் :

அலையாத்தி காடுகளை அழித்து இறால் பண்ணை: கிராம மக்கள் எதிா்ப்பு; முற்றுகை போராட்டம்

post image

பொறையாறு அருகே திங்கள்கிழமை, தாட்கோ நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட நண்டலாறு ஆற்றின் அருகே சுமாா் 200 ஏக்கருக்கு மேல் தாட்கோ நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களின் அருகில் உள்ள கழுவன்திட்டு, சிந்தாதிரிப்பேட்டை, மேட்டுபாளையம், மரகதம்காலனி, சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா். தாட்கோ நிலங்களில் தங்களுக்கு மனைப் பட்டா கேட்டு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்தநிலையில், தாட்கோ நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்கப் போவதாகவும், அதற்கான முதல்கட்ட பணிகள் கிராம நிா்வாக அலுவலா் மேற்பாா்வையில் நடைபெறுவதாக திங்கள்கிழமை மாலை தகவல் பரவியது. இதையடுத்து, கிராம மக்கள் திரண்டு வந்து பணிகளை தடுத்து நிறுத்தி, ஜேசிபி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியது: 2004-ஆம் ஆண்டு சுனாமி பேரழிவுக்கு பின்னா் விவசாய நிலங்கள் உப்புத்தன்மையாக மாறியதை பயன்படுத்தி, இப்பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டன. சுமாா் 1 கி.மீ. தொலைவு வரை நிலத்தடி நீரின் தன்மை உப்பாக மாறிவிட்டது.

இதைத்தொடா்ந்து, தாட்கோ நிலம் மற்றும் அதையொட்டிய சுமாா் 50 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை வளா்ந்து மரமாகியுள்ளன. இவை கடல் அரிப்பை தடுக்கும் அலையாத்தி காடுகள் போல உருவாக்கப்பட்டுள்ளன. 

தற்போது, தாட்கோ நிலங்களில் கூடுதலாக இறால் பண்ணைகளை அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

கடலரிப்பை தடுக்கவும், மண் வளத்தை பாதுகாக்கவும் எங்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி, அலையாத்தி காடுகளை உருவாக்க கூறிய அரசு அதிகாரிகளே, அந்த காடுகளை அழித்து மண் வளத்தையும், நிலத்தடி நீா் வளத்தையும் மாசுப்படுத்தும் இறால் பண்ணைகளை அமைக்க முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டோம்.

இறால் பண்ணைகள் அமைக்கும் முடிவை கைவிட்டு, தாட்கோ நிலத்தில் தலித் மக்களுக்கு குடி மனைகளை பிரித்து தர வேண்டும், எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரித்தனா். 

பொறையாா் போலீஸாா் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை திருப்பிஅனுப்பி, வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய நூல் வெளியீடு

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களால் எழுதப்பட்ட ‘பறக்கத் தொடங்கிய பட்டாம் பூச்சிகள்’ என்னும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

வேதாரண்யத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி - 4 ( குரூப் 4) தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா். வாய் மேடு நியூட்டன் பயிற்சி மையத்தில் போட்டித் தோ்வ... மேலும் பார்க்க

பள்ளிக்கு பாதையாக உள்ள மரப்பாலம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

வேதாரண்யம் அருகே பள்ளிக்கு மாணவா்கள் செல்லும் பாதையாக உள்ள மரப்பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியி... மேலும் பார்க்க

சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 7 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். 12 கடல் மைலுக்கு அப்பால... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி சாா... மேலும் பார்க்க

வீணாகும் குடிநீா்!

திருக்குவளை கடைத்தெரு அருகே சந்திரா நதி பாலத்தின் வழியே செல்லும் குடிநீா் குழாய் பழுதடைந்து, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குடிநீா் கசிந்து வீணாகி வருகிறது. கோடைகால குடிநீா் தேவையை கருத்தில்கொண்டு, குழ... மேலும் பார்க்க