மம்முட்டி நடிக்கும் பசூகா... டிரைலர் வெளியீடு!
மம்மூட்டி - கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள பசூகா படத்தின் டிரைலர் வெளியானது.
மம்மூட்டி நடிப்பில் கடைசியாக டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியானது. கௌதம் மேனன் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குநரான தீனோ டென்னிஸ் இயக்கத்தில் ‘பசூகா’ என்ற புதிய படத்தில் மம்முட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
‘பசூகா’ வருகிற ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இதற்கு அடுத்ததாக மம்முட்டி தனது சொந்தத் தயாரிப்பில் ‘களம்காவல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் கவனம் ஈர்க்கும் விதமாக இருந்தது. குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படம் இவ்வாண்டின் இறுதிக்குள் வெளியாகும் கூறப்படுகிறது.