திருப்பதி மெடிகேரில் ரூ.1,050 கோடி முதலீடு செய்யும் கோட்டக்!
மும்பை: கோடக் அல்டெர்னட் அசெட் மேனேஜர்ஸ் லிமிடெட் இன்று திருப்பதி மெடிகேரில் ரூ.1,050 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தையடுத்து, நிறுவனத்தின் விரிவாக்க முயற்சிகளுக்கு இது ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அஃபிர்மா கேபிடல் முழுவதுமாக வெளியேறும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது திருப்பதி மெடிகேர்.
2005ல் நிறுவப்பட்ட திருப்பதி மெடிகேர் ஊட்டச்சத்து மருந்து உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருப்பதால் ஹெர்பலைஃப், கிளான்பியா, அபோட், டோரண்ட், டாக்டர் ரெட்டிஸ் மற்றும் ஃபைசர் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார் கோடக் அல்டெர்னட் அசெட் மேனேஜர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஈஸ்வர்.
கோட்க் அல்டெர்னட் பங்குதாரரான ராகுல் ஷா இது குறித்து தெரிவிக்கையில், நிறுவனம் தற்போது உள்நாட்டு சந்தையில் கணிசமான வளர்ச்சியை நோக்கி செல்வதாகவும், விரைவில் ஏற்றுமதி பிரிவில் முத்திரை பதிப்போம் என்றார்.
நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அசோக் கோயல், நாங்கள் வணிக தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் புதுமையை புகுத்துவோம் என்றார்.
இதையும் படிக்க: 25 முக்கியமான நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு!