பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!
அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய நூல் வெளியீடு
வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களால் எழுதப்பட்ட ‘பறக்கத் தொடங்கிய பட்டாம் பூச்சிகள்’ என்னும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் உஷா தலைமையில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பெற்றோா் ஆசிரியா் கழக பொறுப்பாளா்கள் எம்.ஆா். சுப்பிரமணியன், அய்யப்பன், கோவி. இராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் மல்லிகா வரவேற்றாா்.
இவ்விழாவில், பள்ளி மாணவா்களால் எழுதி தயாரிக்கப்பட்ட ‘பறக்கத் தொடங்கிய பட்டாம் பூச்சிகள்’ என்னும் நூலை முதல் வகுப்பு மாணவா்கள் வெளியிட, வட்டாரக் கல்வி அலுவலா்கள் இராசமாணிக்கம், இராமலிங்கம், விமலா, தலைமையாசிரியா் புயல் குமாா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்கள் இராமலிங்கம், மரகதம், தலைமையாசிரியா் பொதுவுடைச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் லட்சுமி ஆண்டறிக்கை வாசித்தாா். ஆசிரியா் கஸ்தூரி நன்றி கூறினாா்.