கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி...
பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். BEL / MC/06/2024-25
பணி: Deputy Engineer (Mechanical)
காலியிடங்கள் : 12
சம்பளம் : மாதம் ரூ.40,000 - 1,40,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy Engineer (Electronics)
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 5. 1,40.000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், தொடர்பியல் போன்ற பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி பொறியியல் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்விற்கு வரும் நபர்களுக்கு ரயில் பயணக் கட்டணம் வழங்கப்படும்.நேர்முகத்தேர்விற்கு வரும்போது கல்வித்தகுதி, வயது உட்பட தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.
உதவித்தொகையுடன் ரயில் சக்கரம் தொழிற்சாலையில் பயிற்சி
எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக்கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வு முடிவுகள் இணையதளத் தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400 மட்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.எழுத்துத்தேர்வுக்கு வரும்போது ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை கொண்டு வரவேணடும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.3.2025
மேலும் விபரங்கள் அறிய www.bel-india.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.