மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி; வெளியேறிய அமைச்சர்
கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் வேலை நடைபெற்ற வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்களுக்கான சம்பளம் வங்கி கணக்குகளின் மூலமாகவும் தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளின் மூலமாகவும் வரவு வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி ரூ.3000 கோடியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்தநிலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கான சம்பளத் தொகையை விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அந்தந்த மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் அதிகம் உள்ள இடங்களில் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் உள்மாவட்ட முக்கிய பிரமுகர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் செங்குன்றாபுரத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலும், பாலவநத்தத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. திட்டப்படி பாலவநத்தத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டியிருந்தனர்.
இதனிடையே, ஆர்ப்பாட்டத்துக்கான அறிகுறி எதுவும் இல்லாமல், சாதாரணமாக கிராமசபா கூட்டம் நடைபெறுவதாக சொல்லி பொதுமக்களை, தி.மு.க.வினர் அங்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வந்தபோது, ஆர்ப்பாட்டத்துக்கான கொடி, ப்ளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலர், கிராம சபா கூட்டத்தை ஏன் ஆர்ப்பாட்டமாக மாற்றவேண்டும் எனக்கேட்டு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் சரமாரி கேள்வி எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்களின் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் அங்கிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் காரில் கிளம்பி சென்றார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பிய பெண்ணான கிழக்கு மாவட்ட பா.ஜ.க.ஒன்றிய துணைத்தலைவர் மீனாவிடம் பேசினோம். "நான் பாலவநத்துக்குட்பட்ட தெற்குப்பட்டி பகுதியில் வசித்து வருகிறேன். எனது குடும்பமே விவசாய கூலி தொழில்தான் செய்கின்றனர். இங்கு உலக தண்ணீர் தினம் மார்ச் 22ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தண்ணீர் தின கிராமசபை கூட்டம் நடத்தப்படும் எனதெரிவிக்கப்பட்டது.
ஆனால் அது மார்ச் 29-ல் நடத்தப்படும் என தேதி மாற்றப்பட்டது. இந்தநிலையில், இன்று காலையில் எங்கள் பகுதிக்குள் வந்த தி.மு.க.வினர் தண்ணீர் தினத்தையொட்டி நீர் பயன்பாடு தொடர்பான கிராமசபை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடத்த உள்ளோம் என கூறி தான், மக்களை திரட்டினர். இதனால் நான் உள்பட எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலரும் கிராம சபை கூட்டத்திற்காக அவர்கள் கூறிய இடத்தில் கூடினோம். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வந்ததுமே கிராம சபை கூட்டத்தை ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்த கூட்டம் போல மாற்றினர்.
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை விடுவிக்காததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூட்டத்தை திசை திருப்பினர். இது எங்களுக்கு அதிர்ச்சியை தந்தது. உண்மையைச் சொல்லி மக்களை திரட்ட முடியாத தி.மு.க.வினர், கிராம சபை கூட்டம் என பொய் சொல்லி எங்களை அழைத்து வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சரை நோக்கி, 'மக்களை ஏன் திசை திருப்புகிறீர்கள், மத்திய அரசு 36 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. பொதுமக்களாகிய எனது கேள்விக்கு அமைச்சராகிய நீங்கள் பதில் சொல்லவேண்டும், விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. அதற்கான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
புகாரை விசாரித்தபின் சம்பளம் சம்பளம் வழங்குவார்கள். அதற்குள் மத்திய அரசை குறைகூறி ஒரு அமைச்சரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாமா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினேன். ஆனால் எனது கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் வந்த வேகத்தில் அவர் விருட்டென காரில் கிளம்பி சென்று விட்டார்" என்றார்.