மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
Roshini Nadar: 'ஹூரூன் பட்டியலில் முதல் இந்தியப் பெண்' - வரலாறு படைத்த HCL தலைவர்; பின்னணி என்ன?
ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, 2025 ம் ஆண்டுக்கான ஹுருன் உலக பெண் பணக்காரர்கள் பட்டியலில் (Hurun Global Rich List 2025 for women) இடம் பிடித்து வரலாறு படைத்துள்ளார்.
டாப் 10 பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ள ரோஷினி, இந்த பட்டியலில் இடம் பெறும் முதல் இந்தியப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொத்து மதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண்மணியான ரோஷினியின் இந்த சாதனையின் பின்னணி என்ன?

Roshini Nadar
2020-ம் ஆண்டே சிவ் நாடார் தனது மகள் ரோஷினி நாடாரை ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக நியமித்தார்.
2021ம் ஆண்டு ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தும் சிவ் நாடார் விலகினார். அப்பதவியில் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
சில வாரங்களுக்கு தனது கம்பெனியை முழுமையாக தனது மகளிடம் ஒப்படைக்கும் விதமாக ஹெச்.சி.எல் நிறுவனத்தில் தனக்கு இருந்த 47 சதவிகித பங்குகளை தனது மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ராவிற்கு சிவ் நாடார் எழுதிக்கொடுத்துவிட்டார்.
இது தவிர வாமா சுந்தரி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் தனக்கு இருந்த 44.17 சதவிகித பங்குகளையும் தனது மகள் பெயருக்கு எழுதிக்கொடுத்துவிட்டார். 12 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடர்ந்து தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று கருதி சொத்துக்களை சிவ் நாடார் தனது மகள் பெயருக்கு மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
பங்குகள் மாற்றப்பட்டதன் மூலம் ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் மற்றும் வாமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் ரோஷினியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தற்போது ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ரோஷினி நாடார், கம்பெனியின் சி.எஸ்.ஆர் போர்டு கமிட்டி தலைவராகவும், சிவ் நாடார் பவுண்டேஷன் அறங்காவலராகவும் இருக்கிறார்.
Hurun Global Rich List 2025
ஹூரூன் பணக்காரர் பட்டியலில் 71 நாடுகளைச் சேர்ந்த 3,442 பில்லியனர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட பில்லியனர்கள் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதில் பல இந்திய பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ள கௌதம் அதானி, உலக அளவில் 18வது இடம் பிடித்துள்ளார்.
அவருக்கு பிறகு 3வது இடத்தில் உள்ளார் ரோஷினி நாடார்.
சன் பார்மசூட்டிக்கல்ஸ் தலைவர் திலீப் சங்வி இந்திய அளவில் 4 வது இடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து விப்ரோவின் ஆசீம் பிரேம்ஜி 5வது இடத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தபோதிலும் உலக பணக்காரர் பட்டியலில் டாப் 10 வரிசையில் இடம்பெறவில்லை. அவரது சொத்து மதிப்பு 1 லட்சம் கோடி குறைந்து 8.6 லட்சம் கோடி யாக உள்ளது.