செய்திகள் :

சர்வ வஸ்ய யாகம்: கடன் ஒழியும்! காரிய ஸித்தியாகும்! நோய் ஆபத்துக்கள் விலகும்! எதிரியும் வசமாவார்!

post image

கன்னியாகுமரி பொற்றையடியில் ஆனந்தமயமான ஸ்ரீசாய்பாபா அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு 13-வது வருஷாபிஷேக நாளில் (10-4-2025) சர்வ வஸ்ய யாகம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. வாசகர்கள் இங்கு சங்கல்பம் செய்து கொண்டால் சகல வேண்டுதலும் நிறைவேறும் என்பது நிச்சயம்.

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சாய்பாபா

சீரடி சாய்பாபா இந்த கலியுகத்தில் பல அற்புதங்களை நடத்திய கண்கண்ட தெய்வம் என்று போற்றப்படுகிறார். அவரோடு வாழ்ந்து பழகிய பல அன்பர்களும் சத்திய சாட்சியாக பாபாவின் அற்புத சித்துக்களை விளக்கி உள்ளனர். தண்ணீரை எண்ணெய்யாக மாற்றி விளக்கு ஏற்றியது, மழையை நிறுத்தியது, காலரா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வந்தது, காணாமல் போன்றவற்றை கண்டுபிடித்து தந்தது, ஏழைகளுக்கு வேண்டியதை அருளியது என நீண்டு கொண்டே செல்லும் பாபாவின் திருவருள்.

அவர் வாழ்ந்தபோது மட்டுமல்ல இப்போதும் பாபாவிடம் வேண்டிக்கொள்ளும் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஆறுதலும் தேறுதலும் தருபவர் சாய்பாபா. இவர் அருளும் ஆலயத்தை மிதித்தாலே போதும் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது உண்மை. பிரம்மஞானமும் பேரானந்தமுமே வடிவமான ஸ்ரீசாயிநாதர், தம்மை முழுதும் நம்பி சரணடைந்த பக்தர்களின் குறைகளையெல்லாம் இல்லாமல் செய்து, அவர்களை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தார். இப்படியாக ஆனந்தமாகவும் இருந்தார், ஆனந்தத்தை வழங்குபவராகவும் இருந்தார் நம்முடைய ஸ்ரீசாயிநாதர்.

இவருடைய அற்புத சித்துக்களால் மனம் கவர்ந்த பக்தர்கள் இவரை பல்வேறு தலங்களில் தரிசித்து வருகின்றனர். அவ்வகையில் கன்னியாகுமரியிலும் ஒரு பிரமாண்ட ஆலயம் எழும்பி உள்ளது. 2009-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலைக்கு அருகே பொற்றையடி என்ற ஊரில் குருஜி சி.பி.சத்பதி மற்றும் டி.கே.எஸ் ஐயா அவர்களின் முயற்சியால் ஆலயப் பணிகள் தொடங்கி 4.4.2012 அன்று பங்குனி மாத பூர நட்சத்திர நாளில் இந்த ஆனந்த சாய்பாபா ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 13-வது வருஷாபிஷேக நன்னாளை ஒட்டி இங்கு 3006 லிட்டர் பாலாபிஷேகமும் மற்றும் வெவ்வேறு திரவியங்களால் மகா அபிஷேகங்களும் பல்வேறு ஆராதனைகள், புறப்பாடுகள் நடைபெற உள்ளன. சர்வ வஸ்ய யாகம் மற்றும் கோபுர கலச அபிஷேகம் சிறப்பு ஆரத்திகள் நடைபெற உள்ளன. கலைமாமணி வீரமணி ராஜு மற்றும் அபிஷேக் ராஜு அவர்களின் இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது. மேலும் மிக மிக விசேஷமான சர்வ வஸ்ய ஹோமமும் நடைபெற உள்ளது. வாசகர்கள் இங்கு சங்கல்பம் செய்து கொண்டால் சகல வேண்டுதலும் நிறைவேறும் என்பது நிச்சயம்.

சர்வ வஸ்ய யாகம்

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த சர்வ வஸ்ய ஹோமத்தில் கலந்து கொள்வதால் என்ன பலன்கள்:

1. தன தான்ய வசிய மகிமையால் உங்கள் வீட்டில் கடன்-தரித்திரம் ஒழிந்து பொன்னும் பொருளும் சேரும்.

2. காரிய ஸித்தி வசியம் மூலம் உங்கள் விருப்பமான காரியங்களை சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

3. பித்ரு வசிய வழிபட்டால் பித்ருக்களை சாந்தப்படுத்தி நோய், விபத்து, ஆபத்துக்களில் இருந்து விடுபடலாம்.

4. ஆன்ம வசியத்தால் பிரச்னை செய்யும் நபர்களை உங்கள் வசமாக்கலாம்.

5. மனோ வசியத்தால் உங்கள் உடலும் உள்ளமும் பிரகாசமாகி உங்கள் வாழ்வை வளப்படுத்தலாம்.

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த ஹோம வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக விசேஷ ரட்சை, உதி பிரசாதம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிபிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் தரிசிக்கலாம்.

சர்வ வஸ்ய யாகம்



சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பதிவு செய்ய இந்த QR - கோடை பயன்படுத்திக் கொள்ளவும்.

சர்வ வஸ்ய யாகம்

ரம்ஜான் பண்டிகை : சென்னை டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை!

ரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜான் பண்டிகைரம்ஜா... மேலும் பார்க்க

4 மாதங்களுக்குப் பிறகு நீச்சல்குளத்தில் உற்சாக குளியல் போட்ட தெய்வானை யானை - பக்தர்கள் மகிழ்ச்சி!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவருகிறது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் திருக்கோயில் நிர்வாகத்தால் 26 வயதான தெய்வானை என்ற பெண் யானை பராமரிக... மேலும் பார்க்க

சேலம்: விமர்சையாக நடைபெற்ற எல்லைப்பிடாரி அம்மன் கோயில் தீமிதி விழா... Photo Album!

சேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்ல... மேலும் பார்க்க

திருநள்ளாறு: `சனீஸ்வரர் கோயிலில் 2025-ல் சனிப்பெயர்ச்சி இல்லை’ - கோயில் நிர்வாகம் சொல்வதென்ன ?

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வரர் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி இந்தக் கோயிலில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாட... மேலும் பார்க்க

வள்ளி - முருகன் திருக்கல்யாணவிழா... வேளிமலையில் பாரம்பர்ய குறவர் படுகளம் நிகழ்ச்சி | Album

கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை குமாரசுவாமி கோயிலில் வள்ளி - முருகன் திருக்கல்யாணவிழா நடந்தது. முன்னதாக வேடர் வடிவில் சென்று வள்ளி பிராட்டியை திருமணம் செய்ய முயலும் முருகப்பெருமானை குறவர்கள் தடுத்து நிற... மேலும் பார்க்க