விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடற்படையில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி
இந்திய கடற்படையில் காலியாக உள்ள 360 BOAT CREW STAFF பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.
விளம்பர எண். 01/2025-BCS
மொத்த காலியிடங்கள்: 360
பணி: Topass
காலியிடங்கள்: 6
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நன்றாக நீந்தும் திறன் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Fireman
காலியிடங்கள்: 78
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Lascar
காலியிடங்கள்: 225
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
டிஆா்பி ஆண்டு அட்டவணை வெளியீடு: ஆகஸ்டில் முதுநிலை ஆசிரியா் தோ்வு
பணி: Syrang
காலியிடங்கள்: 57
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பணிக்கான பயிற்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம், பேருந்து கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.3.2025