கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி...
பாதுகாப்புப் படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!
இந்திய ராணுவத்தின் துணை ராணுவமான இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Constable, General Duty(Sports Quota)-2024
காலியிடங்கள்: 133
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கேற்று குறைந்தபட்சம் 3 ஆவது இடத்திலாது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.11.2025 தேதியின்படி 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டுத் திறன், உடற்தகுதி, மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
ஆண் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ அகலம், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ அகலம் இருக்க வேண்டும். பெண் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும் இருக்க வேண்டும்.
தேர்வு குறித்த விவரம் விண்ணப்பத்தாரரின் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:www.recruitment.itbpolice.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.4.2025