மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்
வயநாடு: நாடாளுமன்ற நிகழ்வுகளை ஆளுங்கட்சியே முடக்க நினைக்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார்.
கேரளத்திலுள்ள தமது சொந்த தொகுதியான வயநாட்டில் சனிக்கிழமை(மார்ச் 29) செய்தியாளர்களுடன் பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதிப்பதில்லை. ஜனநாயக நடைமுறையை செயல்படுத்தவிடாமல் தடுப்பதற்கு, வித்தியாசாமான முயற்சிகளை அவர்கள் கையிலெடுத்துள்ளனர்.
வழக்கமாக, நடாளுமன்ற நிகழ்வுகளை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும். ஆனால், ஆளுங்கட்சியே நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்குவது புதிதாக உள்ளது” என்றார்.