செய்திகள் :

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

post image

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்விட்டதாக காவல்துறையினரிடம் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். யாதவ்வை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அண்டை கிராமத்தில் எரிக்கப்பட்ட நிலையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்தில் மோப்ப நாய்களைக் கொண்டு ஆய்வு செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் யுக்வலின் செருப்புகள் இருந்ததைக் கொண்டு, மோப்ப நாய்கள் மாந்திரீகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றன.

அங்கிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள்தான் யுக்வலை கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, சுதிர் பாஸ்வான் என்பவர் குழந்தை பாக்கியம்வேண்டி, மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனுடன் சேர்ந்து பூஜை நடத்தினார். மேலும், ஒரு மனிதரின் தலையைத் துண்டித்து, அவரின் தலையை ஹோலிகா தஹான் தீயில் எரித்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறியதால், யுக்வலை கடத்தி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.

அதுமட்டுமின்றி, மற்றுமொரு இளைஞரையும் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதாகவும் கூறினர்.

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுதிர் பாஸ்வான் மற்றும் மாந்திரீகரின் ஆள்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க:டைம் டிராவல் செய்ய ஆசையா? கூகுளின் புதிய அம்சம்!

சமைக்காத இறைச்சி சாப்பிட்ட 2 வயது குழந்தை பலி: ஆந்திரத்தில் அதிர்ச்சி!

ஆந்திரத்தில் சமைக்காத இறைச்சியை சாப்பிட்ட 2 வயது குழந்தை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பார்க்க

விவாதத்துக்கு ஆப்சென்ட், வாக்கெடுப்புக்கு பிரசன்ட்! ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தை புறக்கணித்துவிட்டு, நள்ளிரவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மட்டும் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.மேலும், எதிர்க்க... மேலும் பார்க்க

வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்: மமதா வேண்டுகோள்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் வரவிருக்கும் ராம நவமி விழாவை அமைதியாகக் கொண்டாடுமாறு அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். ஏப்ரல் 6ஆம... மேலும் பார்க்க

மணிப்பூரை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

மத்திய அரசு மணிப்பூரைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தாய்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நிகழவுள்ள 6-ஆவது பிம... மேலும் பார்க்க

வக்ஃப் நிலத்தை அபகரித்த கார்கே.. அனுராக் தாக்குர் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு

புது தில்லி: வக்ஃப் வாரிய நிலத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அபகரித்திருந்ததாக, பாஜக எம்.பி. அனுராக் கூறிய குற்றச்சாட்டுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மாநிலங்களவை இன்று காலை கூடியதும், த... மேலும் பார்க்க

ஜாம்நகர் அருகே போர் விமான விபத்தில் விமானி பலி

ஆமதாபாத்: ஜாம்நகர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் விபத்தில் விமானி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள... மேலும் பார்க்க