நானி படத்தில் சிறப்பு தோற்றத்தில் கார்த்தி?
நடிகர் நானியின் புதிய படத்தில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இதற்கிடையே, நானி ஹிட் - 3 திரைப்படத்தில் நடித்து முடித்தார். வால் போஸ்டர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சைலேஷ் கொலனு இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் ஹிட் - 4-ல் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறேன்: விக்ரம்