மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
Toothpaste: டூத் பேஸ்ட்டில் இருக்கும் வண்ணக் கோடுகள் உண்மையில் எதைக் குறிக்கிறது தெரியுமா?
நான் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று டூத் பேஸ்ட். இதனை காலையில் தினமும் பயன்படுத்தி வருவோம். சந்தைகளில் பல்வேறு வகையான டூத் பேஸ்ட்கள் கிடைக்கின்றன.
ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு பற்பசையை தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் அந்த டூத் பேஸ்டில் இருக்கும் வண்ணத்தை பொறுத்து பயன்படுத்துவர்.
அதாவது பச்சை நிறத்தில் இருந்தால் எந்த கெமிக்கலும் கலக்கவில்லை என்று மக்கள் நம்பி அதனை வாங்கி பயன்படுத்துவர்.

இதுபோன்று பற்பசையில் கறுப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்கள் இருப்பதை கவனித்திருப்போம்.
பேஸ்ட்டில் கறுப்பு நிறம் இருந்தால், இந்த பேஸ்ட்டில் நிறைய ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, உங்கள் பேஸ்ட்டில் பச்சை நிறம் இருந்தால், இதில் இயற்கை பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது, பேஸ்ட்டில் நீல நிறம் இருந்தால் இயற்கையான பொருள்கள் மற்றும் மருந்துகள் உள்ளன என்றெல்லாம் பல விஷங்களை கூறுகின்றனர்.
உண்மையில் இந்த வண்ணக் குறியீடுகள் டூத் பேஸ்ட்டின் பாதுகாப்பை தான் உறுதி செய்கின்றதா என்பது குறித்து பார்க்கலாம்.
பராஸ் ஹெல்த் நிறுவனத்தின் பல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் சகீர் ஆசாஸின் கூற்றுப்படி,
பெரும்பாலான மக்கள், டூத் பேஸ்ட்டின் அடிப்பகுதியில் இருக்கும் வண்ண குறியீடுகள் பற்பசையின் பொருட்கள் அல்லது அதன் தரத்தை குறிப்பதாக நம்புகின்றனர்.
ஆனால் இது உண்மையில் உற்பத்தி செயல்முறையை குறிக்கிறது. அதாவது சென்சார் இயந்திரங்கள் பற்பசை குழாய் பேக்கேஜிங்கை எங்கு வெட்டுவது, மடிப்பது, சீல் வைப்பது என்பதை அறிய இது போன்ற வண்ணக் கோடுகள் உதவுவதாக கூறுகின்றார். பற்பசையின் பொருளுக்கும் அதன் பாதுகாப்பிற்கும் இந்த வண்ணக் கோடுகள் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை என்றும் கூறுகிறார்.
பற்பசை வாங்கும்போது நீங்கள் ஃவுளூரைடு கொண்ட பற்பசையை தேர்வு செய்தால் அது பல் சிதைவிலிருந்து தடுக்க உதவும் என்றும் கூறுகிறார்.
ஆனால் உங்களின் பற்கள் குறித்த ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்பட்டால் பல் மருத்துவரை அணுகி அவர்களின் பரிந்துரைப்படி உங்களின் பிரச்னைகளுக்கு ஏற்ப பொருத்தமான பற்பசையை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.