செய்திகள் :

Nudist: "இந்த கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவரத் தடை" - ஜெர்மனி போட்ட புதிய விதி என்ன தெரியுமா?

post image

ஜெர்மனியில் இயற்கை வாழ்வியலை ஆதரிக்கும் மக்கள் பயன்படுத்தும் நிர்வாண கடற்கரைகளில் உடையணிந்து செல்பவர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடற்கரை நகரமான ரோஸ்டாக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறையின்படி, நிர்வாணக் கடற்கரையில் ஆடைகளைக் கலைய மறுக்கும் பார்வையாளர்களை வெளியேற்ற கடற்கரை காவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் செல்லும் நிர்வாணக் கடற்கரைகளில், உடை அணிந்து வருபவர்களால் அசௌகரியம் ஏற்படுவதாகப் பல புகார்கள் எழுப்பப்பட்டதனால் இந்த விதிமுறையைக் கொண்டுவந்துள்ளனர்.

Nudist

ஆடை அணிந்து உள்ளேயே செல்ல முடியாதா என்று கேட்டால்... செல்லலாம். ஆனால் அங்கு யாராவது அசௌகரியமாக உணர்ந்தால், புகார் அல்லது மோதல் எழுந்தால் ஆடையைக் கலைய மறுப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என ரோஸ்டாக் சுற்றுலாவைச் சேர்ந்த மோரிட்ஸ் நௌமன் சி.என்.என் செய்தித் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ரோஸ்டாக்கில் உள்ள 15 கிலோ மீட்டர் கடற்கரை, மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிர்வாண பயனர்களுக்கானது, கலந்து பயன்படுத்துவது மற்றும் உடை அணிந்து பயன்படுத்துவது (naturist-only, mixed-use, and textile-only).

இந்த பிரிவுகள் மூலம் அனைவருமே கடற்கரையை அனுபவிக்க முடியும்.

சமீப காலமாக நிர்வாணக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதனால் ரோஸ்டாக்கில் நிர்வாணம் அனுமதிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை 37ல் இருந்து 27 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிர்வாணச் கலாசாரத்தின் (Nudist Culture) வரலாறு

ஜெர்மனியில் வரலாற்று ரீதியிலான கட்டுப்பாடுகளை உடைத்து 19ம் நூற்றாண்டில் இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் பெரும் பிரிவாக உருவாகினர்.

Nudist

இவர்கள் நிர்வாணக் கலாசாரத்தை Freikorperkultur (FKK) அல்லது சுதந்திர உடல் கலாசாரம் (Free Body Culture) என அழைக்கின்றனர்.

பல ஆண்டுகளாக ஜெர்மானியர்கள் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் மலையேற்றப் பாதைகளில் கூட சமூகமாக நிர்வாணத்தைப் பழகுகின்றனர்.

நிர்வாணமாக அரட்டை அடிப்பதும் விளையாடுவதும் இவர்களது பொழுதுபோக்கு.

அவர்களைப் பொருத்தவரை நிர்வாணம் பாலியல் ரீதியானதோ, அவமானமோ கிடையாது. மிகவும் சாதாரணமானது, இயற்கையானது.

ஆனால் இங்கு உலாவ சில எழுதப்படாத விதிகள் உள்ளன. ஒருவரின் உடலை வெறித்துப் பார்க்கக் கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது மற்றும் எதிர்மறையாகத் தேவையற்றக் கருத்துக்களைக் கூறக்கூடாது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Toothpaste: டூத் பேஸ்ட்டில் இருக்கும் வண்ணக் கோடுகள் உண்மையில் எதைக் குறிக்கிறது தெரியுமா?

நான் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று டூத் பேஸ்ட். இதனை காலையில் தினமும் பயன்படுத்தி வருவோம். சந்தைகளில் பல்வேறு வகையான டூத் பேஸ்ட்கள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வே... மேலும் பார்க்க

என் வானிலே! - 90ஸ் இளைஞரின் சிலிர்பனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பகுதி நேர வேலையாக மணிரத்தினம் படத்தில் நடித்த அனுபவம் - 80s Kids கல்லூரி நினைவலை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: போரினால் மகிழ்ச்சியான பின்லாந்து; இந்தியாவின் இடம் என்ன?

தொடர்ந்து 8-வது முறையாக உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற படத்தைப் பெற்றிருக்கிறது பின்லாந்து. மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் இந்தியாவோ அமெரிக்காவோ பிரகாசிக்காதது ஏன்?கடந்த மார்ச் 20-ம் தேதி, ஐ.நாவின்... மேலும் பார்க்க

உறவும் நட்பும்! - குறுங்கதை | My Vikatan