மின்சாரம் தாக்கி இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி; புதுச்சேரி அரசின் அறிவிப்பு என்ன?
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
வேளாண்மை, கால்நடை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு, சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தேனீ ஜெயக்குமார், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, "விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் எதிர்பாராமல் மின்சாரம் மற்றும் வனவிலங்குகளால் தாக்கப்பட்டும், விஷ ஜந்துக்கள் கடித்தும், மின்னல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் தாக்கியும் உயிரிழக்க நேரிட்டால், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்படும்.
மேலும், இத்தகைய தாக்குதல்களால் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் கிடைக்கக் காப்பீடு செய்யப்படும். அதற்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தும்.

மேலும், விவசாய நிலம் இல்லாத கால்நடை வளர்க்கும் விவசாயிகள் உயிரிழந்தால் விபத்து காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.5 லட்சமும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும்.
அதிக மகசூல் தரக்கூடிய நெல் சாகுபடிக்கான ஊக்கத் தொகை ஏக்கருக்கு (இரண்டு பருவம்) ரூ.10,000-ல் இருந்து ரூ.18,000 ஆகவும், சிறுதானியங்களுக்கு ரூ.7,000-ல் இருந்து ரூ.8,000 ஆகவும், பயறு வகைகளுக்கு ரூ.4,000-ல் இருந்து ரூ. 5,000 ஆகவும், மணிலாவுக்கு ரூ.8,000-ல் இருந்து 9,000 ஆகவும், எள்ளுக்கு ரூ.5,000-ல் இருந்து 6,000 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.
மதகடிப்பட்டு வாரச்சந்தை இடத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்துப் பிற நாட்களில் உழவர் சந்தை செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ஸ்மார்ட் விவசாய அட்டை வழங்கப்படும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs