காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா
2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

அதற்கேற்ப மார்ச் 25 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர். டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்துக்கே நேரில் சென்று சந்திருந்தனர்.
ஆனால் கூட்டணி குறித்து இருத்தரப்பினரும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "கூட்டணி குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவோம்" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs