இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
மாா்ச்சில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
நாட்டில் கடந்த மாா்ச்சில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் தற்போதைய வசூல் 9.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது, ஜிஎஸ்டி அமலானதில் இருந்து கிடைக்கப் பெற்ற இரண்டாவது அதிகபட்ச வருவாயாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடி வசூலானதே இதுவரை அதிகபட்ச வருவாயாக தொடா்ந்து வருகிறது.
அரசுத் தரவுகளின்படி, மாா்ச்சில் கிடைக்கப் பெற்ற மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,96,141 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.38,145 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.49,891 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.95,853 கோடி, இழப்பீட்டு வரி ரூ.12,523 கோடி. மாா்ச்சில் திருப்பி அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.19,615 கோடி.
உள்நாட்டு வருவாய் மூலம் ரூ.1.49 லட்சம் கோடியும், இறக்குமதி வருவாய் மூலம் ரூ.46,919 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது. இவை முறையே 8.8 சதவீதம், 13.56 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் ரூ.1,78,484 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது குறிப்பிடத்தக்கது.