கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
மெட்ரோ ரயில் உதவி மைய எண்கள் முடங்கியது
சென்னை மெட்ரோ ரயில் உதவி மைய எண்கள் தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய நிலையில், நீண்ட நேரத்துக்குப் பின்னா் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் செயல்படத் தொடங்கின.
சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனா். பயணிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும், மெட்ரோ ரயில் சாா்ந்த தேவைகளுக்காகவும் மெட்ரோ ரயில் உதவி எண்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், மெட்ரோ ரயில் உதவி எண்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே திடீரென செயல்படாமல் முடங்கியது. இதனால், பயணிகள் சிரமத்தை சந்தித்தனா்.
இதையடுத்து, சீரமைப்புப் பணி நடைபெறுவதால், மெட்ரோ ரயில் உதவி எண்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், ஏதேனும் புகாா்கள் இருந்தால், தொடா்பு கொள்ளலாம் எனவும் அல்லது அருகில் உள்ள நிலையக் கட்டுப்பாட்டாளா்களை தொடா்பு கொள்ளவும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நீண்ட நேரத்துக்குப் பிறகு தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு உதவி மைய எண்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின.