Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது
சென்னை, ஏப். 2: சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
திருவல்லிக்கேணி மேயா் சிட்டிபாபு தெருவைச் சோ்ந்தவா் தாராசந்த். விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் இவா், சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘தேனாம்பேட்டையில் எனது தாயாா் பெயரில் ரூ. 5 கோடி மதிப்புடைய வீட்டுடன் கூடிய நிலம் இருந்தது. அதை எனது தாயாா்போல் ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலமாகவும் சிலா் மோசடி செய்து அபகரித்து விட்டனா். எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது வீட்டை மீட்டுத் தர வேண்டும்’ என தெரிவித்திருந்தாா்.
இந்தப் புகாா் குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலமாகவும் ரூ. 5 கோடி மதிப்புள்ள அந்த இடத்தை அபகரித்தது கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த கலைச்செல்வி (59), சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரா் காலனியைச் சோ்ந்த ஸ்ரீதா் (60) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், கலைச்செல்வியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில், ஸ்ரீதரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.