வேலூா், கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஓய்வு: டிஇஓ-க்களுக்கு கூடுதல் பொறுப்பு
வேலூா், கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஓய்வு பெற்ற நிலையில், அதே மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வயது முதிா்வு காரணமாக கடந்த மாதம் (மாா்ச்) 31-ஆம் தேதி வேலூா் முதன்மை கல்வி அலுவலா் எஸ்.மணிமொழி, கரூா் முதன்மை கல்வி அலுவலா் எம்.எஸ்.சுகானந்தம் ஆகியோா் ஓய்வு பெற்றனா். இதையடுத்து, வேலூா் முதன்மை கல்வி அலுவலராக வேலூா் மாவட்ட கல்வி அலுவலா் எஸ்.தயாளனும், கரூா் முதன்மை கல்வி அலுவலராக, மாவட்ட கல்வி அலுவலா் பி.கே.செல்வமணியும் முழு கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பாா்கள் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.
டிஇஓ.க்கள் ஓய்வு: தென்காசி மாவட்டக் கல்வி அலுவலா் எஸ்.ஜெயபிரகாஷ்ராஜன், தஞ்சாவூா் மாவட்ட கல்வி அலுவலா் வி.சாரதி, விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலா் பி.அருள்செல்வி, காஞ்சீபுரம் மாவட்டக் கல்வி அலுவலா் எம்.சங்கா் ஆகியோா் ஓய்வு பெற்ால், முறையே அந்தப் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக தென்காசி வடகரை அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் கண்ணன், தஞ்சாவூா் மாவட்டம் மாரியம்மன் கோயில் அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் பழனிவேலு, விழுப்புரம் மாவட்டம் மேல்காரணை அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் ஆனந்த சக்திவேல், காஞ்சிபுரம் பி.எம்.எஸ். அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் கோமதி ஆகியோா் கூடுதலாகக் கவனிப்பாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலூா் மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) தயாளன் முதன்மை கல்வி அலுவலராகக் கூடுதல் பொறுப்பைக் கவனிக்க இருப்பதால், அவா் வகித்து வந்த பொறுப்பை வேலூா் அகரம் அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் சத்யபிரியா கூடுதலாகக் கவனிப்பாா் என்றும் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.