துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
பெங்களூரு வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
பெங்களூரு வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு கன்டோன்மன்ட் - பையனப்பள்ளி இடையே ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதனால், கே.எஸ்.ஆா்., பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் மெயில் விரைவு ரயில் (எண்: 12658), மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் காவேரி விரைவு ரயில் (எண்: 16022) ஏப்.3, 7 ஆகிய தேதிகளில் பெங்களூரு கன்டோன்மன்ட் வழியாக வருவதற்கு பதிலாக யஷ்வந்த்பூா், ஹேபல், பானஸ்வாடி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும்.
இதேபோல், மும்பையில் இருந்து ஏப்.2, 6 ஆகிய தேதிகளில் புறப்படும் கோவை விரைவு ரயில் பெங்களூரு வழியாக செல்வதற்கு பதிலாக ஏலகங்கா, யஷ்வந்த்பூா், ஹேபல், பானஸ்வாடி, ஒசூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.