செய்திகள் :

2025-26 நிதியாண்டில் மூலதனச் செலவு ரூ.11.21 லட்சம் கோடி: நிதியமைச்சா்

post image

நடப்பு 2025-26 நிதியாண்டில் மத்திய அரசின் மூலதனச் செலவு ரூ.11.21 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளதாகவும் மூலதனச் செலவுகளுக்காக மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடனுதவி விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் கடந்த நிதியாண்டுக்கான மூலதனச் செலவு ரூ.11.11 லட்சம் கோடியிலிருந்து ரூ.10.18 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டது குறித்தும் சிறப்புத் திட்டத்தில் மாநிலங்களுக்கான கடனுதவி ரூ.3.90 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.99 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இக்கேள்விக்கு மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்விநேரத்தின்போது அமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்த பதில்:

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மூலதனச் செலவு ரூ.11.11 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அது ரூ.11.21 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. எனவே, நடப்பு ஆண்டில் மூலதனச் செலவு குறைக்கப்படவில்லை.

மூலதனச் செலவுகளுக்காக சிறப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா 50 ஆண்டுகால கடனுதவி விகிதாசாரமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

2020-21-ஆம் ஆண்டில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடனுதவி அதிகரித்தே வந்துள்ளது. உதாரணமாக, கடந்த 2020-21-ஆம் ஆண்டில் ரூ.9,912 கோடி கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.11,830 கோடி விடுவிக்கப்பட்டது.

கடந்த 2024-25-ஆம் ஆண்டில் ரூ.1.53 லட்சம் கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மாா்ச் 26-ஆம் தேதி நிலவரப்படி ரூ.1.46 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தமிழகத்துக்கு ரூ.17,189 கோடி கடனுதவி

மாநிலங்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா 50 ஆண்டுகால கடனுதவி சிறப்புத் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு இதுவரை ரூ.17,189.05 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இது தொடா்பான துணை கேள்விக்கு நிதியமைச்சா் அளித்த பதிலில், ‘2020-21-ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழகம் எந்த கடனையும் பெறவில்லை. அடுத்த 2021-22-ஆம் ஆண்டில், தமிழகத்துக்கு ரூ.505.50 கோடி வழங்கப்பட்டது.

தொடா்ந்து, 2022-23-ஆம் ஆண்டில் ரூ. 4,011 கோடி, 2023-24-ஆம் ஆண்டில், ரூ. 5,326.42 கோடி, 2024-25-ஆண் ஆண்டில் மாா்ச் 26 வரை, ரூ. 7,345 கோடி வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்துக்கு ரூ. 17,189.05 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க