செய்திகள் :

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

post image

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச் சந்தை, நிறுவனங்கள் மீது முதலீடு, இரண்டாம்நிலை தொழில், சேமிப்பு என்று பல்வேறு வகைகளில் நிதி நிலைமையை மேம்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் மியூச்சுவல் ஃபண்டும் அடங்கும்.

தற்போது, பெண்களும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதாக ஆய்வு கூறுகிறது. மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களில் 25 சதவிகிதத்தினர் பெண்களாக உள்ளனர். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் பெண்களின் சொத்து மதிப்பு இரட்டிப்பாவதாகவும் கூறுகிறது.

2020 முதல் எஸ்ஐபி-க்களில் அதிகரிக்கும் முதலீடு 250 சதவிகிதமாக இருந்தாலும், அவர்களின் முதன்மை தேர்வாக ஈக்விட்டியே உள்ளது. 2024 டிசம்பர் தரவுகளின்படி, முதலீட்டாளர்களில் நான்கில் ஒருவர் பெண் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

2019 மார்ச் மாதத்தில் பெண் முதலீட்டாளர்கள் நிர்வாகத்தின்கீழான சொத்து மதிப்பு ரூ. 4.59 கோடியாக இருந்த நிலையில், 2024 மார்ச் மாதத்தில் ரூ. 11.25 கோடியாக உயர்ந்தது.

பெண் முதலீட்டாளர்கள், பெரும்பாலும் நீண்டகால முதலீட்டையே விரும்புகின்றனர். நிதி சுதந்திரம் மற்றும் வருங்காலத்துக்கான பாதுகாப்பு அரணாகக் கருதி, பெண்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருவது சிறந்தது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

இதையும் படிக்க:டைம் டிராவல் செய்ய ஆசையா? கூகுளின் புதிய அம்சம்!

2025-26 நிதியாண்டில் மூலதனச் செலவு ரூ.11.21 லட்சம் கோடி: நிதியமைச்சா்

நடப்பு 2025-26 நிதியாண்டில் மத்திய அரசின் மூலதனச் செலவு ரூ.11.21 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளதாகவும் மூலதனச் செலவுகளுக்காக மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடனுதவி விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மாா்ச்சில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி

நாட்டில் கடந்த மாா்ச்சில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் தற்போதைய வசூல் 9.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, ஜிஎஸ்டி அமலானதில் இருந்து... மேலும் பார்க்க

ஆழ்கடல் சுரங்கங்கள் மீதான எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: மத்திய அரசு நிராகரிப்பு

ஆழ்கடல் பகுதியில் கனிமச் சுரங்கங்களை அமைக்க தனியாரை அனுமதிக்கும் முடிவு மீதான எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிராகரித்தது. கடல் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்க... மேலும் பார்க்க

உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு

‘இந்தியாவின் வரிக் கொள்கை வா்த்தகத்தை முறைப்படுத்துவது, உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருள்கள் மீதான வரிகள் மூலம் வருவாயைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது’ என்று மத்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா இன்று தாக்கல்: 8 மணி நேர விவாதத்துக்கு அனுமதி

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை (ஏப். 2) தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தவுள்ளதாகவும், தேவைப்படும்பட்சத்தில் வி... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து முகமது யூனுஸ் சா்ச்சை கருத்து: முதல்வா்கள், காங்கிரஸ் கண்டனம்

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்த சா்ச்சை கருத்துக்கு அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மணிப்பூா் முன்னாள் முதல்வா் பிரேன் சிங் உள்ளிட்டோா் செவ்வா... மேலும் பார்க்க