கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி...
மாநகராட்சியாகும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரி நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, நகராட்சிகளின் மக்கள்தொகை மற்றும் வருவாய் தொடர்பாக திமுக உறுப்பினர் அனிபால் கென்னடியின் கேள்விக்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசினார்.வி
இதையும் படிக்க : மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்
புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அரியாங்குப்பம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சியாக உயர்த்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தாகவே தொடரட்டும், நகராட்சியாக உயர்த்தினால் பலவிதமான வரிகளை போடுவீர்கள் என்று தெரிவித்தார்.