தனி படுக்கை, தனி உறக்கம்; தம்பதிகளிடையே பிரபலமாகும் Sleep Divorce - என்ன காரணம்?
சமாதானக் கழகத்தினா் நிதி திரட்டல்
புதுச்சேரியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கியூபா மக்களை பாதுகாக்க நிதி திரட்டும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நாரா கலைநாதன் தலைமை வகித்தாா்.
பொதுச் செயலா்கள் ஜீவானந்தம், சுதா சுந்தர்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமெரிக்க அதிபா் கியூபா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை ரத்து செய்ய வேண்டும்.
கியூபா மக்கள், குழந்தைகளை பாதுகாப்போம், அந்த நாட்டு மாணவா்களின் கல்வி உரிமையை நிலை நாட்டுவோம்.
இந்தியா- கியூபா உறவை பலப்படுத்துவோம் என எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி நேரு வீதி உள்ளிட்ட பல முக்கிய வீதிகளில் வியாபாரிகள், பொதுமக்களிடம் ஒருமைப்பாட்டுக் கழகத்தினா் நிதி திரட்டினா்.