செய்திகள் :

``எடப்பாடி பழனிசாமி , செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்'' -அமைச்சர் ரகுபதி

post image

தொகுதி மறுசீரமைப்பு - மக்கள் தொகை:

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படுகின்ற மற்ற மாநிலங்களை அணுகி அவர்களையும் இதில் சேர்த்துக் கொண்டு ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி அதன் மூலமாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக, கடந்த 1971-ம் ஆண்டுவரை தென் மாநிலங்களில் மக்கள் தொகை 23.41 சதவீதம். அதே நேரத்தில் வட மாநிலம் மக்கள் தொகை வளர்ச்சி 24.39 சதவீதம். ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இருந்தது. அதனால், மறுவரையில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை.

அமைச்சர் ரகுபதி

அதற்குப் பிறகு, நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தினோம். அதன் விளைவு தற்போதைய கணக்கின்படி தென் மாநிலத்தில் மக்கள் தொகை 12.51 சதவீதம் இருக்கிறது. அதே நேரத்தில், வடமாநிலங்களில் 21.83 சதவீதமாக உள்ளது. 9 சதவீதம் வடமாநிலம் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அதனால், தற்போது தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென் மாநிலங்களுக்கு தொகுதி குறைக்கப்படும்.

குடும்பக் கட்டுப்பாட்டை முறையாக அமல்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் இந்திய பொருளாதாரத்திற்கு உதவிய நிலையில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்பட கூடாது என்பதை தெளிவு படுத்தியுள்ளோம்.

மக்கள் தொகை வித்தியாசத்தில் மட்டுமல்ல, பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டால் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் பொருளாதாரத்திலும் பெரும்பங்காற்றுகிறது.

உள்நாட்டு உற்பத்தியில் 36 சதவீதம் பெருக்கி உள்ளபோது திரும்ப கிடைக்கின்ற வரி பகிர்வு 27 சதவீதம். அதே பீகார் உத்திரபிரதேசம் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்நாட்டு உற்பத்தி என்பது இருபது சதவீதம். ஆனால், 42.5 சதவீதம் வரிப்பங்கை பெறுகின்றன. நாம் 36 சதவீதத்தை கொடுத்துவிட்டு 27 சதவீதத்தை வரி பங்காக பெறுகிறோம். ஆனால், வட மாநிலங்கள் 20 சதவீதத்தை கொடுத்துவிட்டு 42.5% வரி பங்காக திரும்ப பெறுகின்றனர்.

ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் தமிழ்நாட்டிற்கு 29, கர்நாடகாவிற்கு 14 என மிகக் குறைவாக வரி கிடைக்கிறது. ஆனால், வட மாநிலத்தை எடுத்துக் கொண்டால் 100 ரூபாய்க்கு ரூ. 425 என நான்கு மடங்கு அதிகமாக பெறுகின்றனர். பீகார் மட்டும் 100 ரூபாயை கொடுத்துவிட்டு 922 ரூபாயை பெறுகிறது.

இதனால்தான் நமது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக ஒன்றிய அரசின் வரி பகிர்வு திரும்பத் தரும் தொகை இருக்கிறது.

இந்த காரணங்களை வைத்து தான் நமக்கு உண்டான நிதியையும் தர வேண்டும். அதே நேரத்தில் வரிப்பகிர்வை முறையாக கொடுக்க வேண்டும். தொகுதி மறு வரை என்பது முறையாக நடக்க வேண்டும் என்பதை சொல்கின்றோம். தென் மாநிலங்களில் தொகுதி மறு சீரமைப்பால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வடமாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடாது என்று உறுதிமொழி தர தயாரா?.

அங்கு தொகுதிகள் நிச்சயமாக கூடும் என்ற பயத்தில் தான் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றோம். குடும்ப கட்டுப்பாடு அமல்படுத்தியதால் எங்களுக்கு தண்டனை தராதீர்கள் என்றுதான் கூறுகின்றோம். மக்கள் தொகை கணக்கெடுங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள். தொகுதி மறு சீரமைப்பை செய்யுங்கள்.

அதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்னையும் கிடையாது. அதே நேரத்தில், 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையில்லையே தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா போதை பொருளை பற்றி பேசுகிறார். நாடு முழுவதும் கடந்த ஐந்தாண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட போதை பொருட்கள் 11,311 கோடி ரூபாய். குஜராத்தில் மட்டும் 7350 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமித்ஷா

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2118 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதை வைத்து போதைப் பொருள் நடமாட்டம் எங்கு இருக்கிறது. போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது என்பதை தமிழ்நாடு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். போதை பொருள் அதிகம் உள்ள 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு கிடையாது. தமிழ்நாட்டிற்கு எந்தவித அவசியமும் கிடையாது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக ராஜஸ்தானில் இருக்கிறது. அதுவும், பா.ஜ.க ஆளும் மாநிலம் தான். தமிழ்நாட்டில் எங்களால் இயன்றவரை போதை பொருள் நடமாட்டத்தை குறைத்து வருகிறோம். இங்கிருந்து போதைப் பொருள் எங்கும் கடத்தப்படுவது கிடையாது. அதே நேரத்தில், குஜராத்தில் இருந்தோ மகாராஷ்டிராவில் இருந்தோ தமிழ்நாட்டிற்கு கடத்தி வரும் பொழுது நமக்கு தெரியாமல் சில இடங்களில் வருகிறது. அதையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதில் தமிழ்நாடு முதலமைச்சர் கவனமாக இருக்கிறார்.

மதுவிலக்கு

குஜராத் மாநிலம் மதுவிலக்கு அமல் செய்த மாநிலம். அதனை பெருமையோடு காந்தி பிறந்த மண் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தியுள்ளோம் என்று அமித்ஷாவும், மோடியும் கூறுகின்றனர். ஆனால் அங்கு 2006-ம் ஆண்டு மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் குஜராத்தில் மது அருந்த தடை இல்லை.

குஜராத் சட்டவிரோத மவுக்கு எதிராக போராடி வந்த மீனா பட்டேல் குஜராத்தில் சட்ட விரோத மது விற்பனை மிகப்பெரிய வணிகமாக உருவெடுத்து இருக்கிறது. மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் தான் மது விலை மிக அதிகமாக பத்து மடங்கு உள்ளது. கள்ளச் சந்தையில் மது விற்கப்படுகிறது.

மதுவிலக்கு

இந்தியாவிலேயே அதிக விலைக்கு மது விற்கக்கூடிய மாநிலம் குஜராத் மாநிலம் என்று அங்கு உள்ளவர்களே கூறினார்கள். அதுவும் சட்ட விரோதமாக விற்கப்படுவது என்று கூறினார்கள். இதை வைத்துப் பார்த்தாலே தெரியும். மதுவிலக்கில் தமிழ்நாடு அரசுக்கு பாடம் சொல்வோம் என்று கூறுகிறார்களே. நாங்கள் என்ன தவறு செய்திருக்கின்றோம் நேரடியாக உண்மையாக வெளிப்படை தன்மையோடு இந்த அரசாங்கம் ஆட்சி நடத்தி வருகிறது.

எங்கே அதிக விலைக்கு மது விற்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துள்ளோம் இதற்கு அவர்கள் தகுந்த பதில் கூறட்டும். 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு இருந்தால் அவர்கள் ஒரு கமிஷன் அமைத்து பார்த்துக் கொள்ளட்டும். எல்லா மாநிலத்திற்கும் 100 நாள் வேலை கொடுக்கிறார்கள். அதேபோல், தமிழ்நாட்டிற்கும் கொடுக்கட்டும். இந்தியாவிலேயே நூறு நாள் வேலைத்திட்டத்தை மிகச் சிறப்பாக செய்த மாநிலம் தமிழ்நாடு. அதற்காக பாராட்டு பரிசுகளையும் பெற்றுள்ளோம். 100 நாள் வேலை வாய்ப்பை தினசரி காலையில் வருகை பதிவோடு செய்து வேலை வாங்குகின்ற அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. பல்வேறு திட்டங்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் நடந்துள்ளது. இதை யார் வேண்டுமென்றாலும் வந்து பார்த்துக் கொள்ளட்டும். வேலை பார்த்தும் ஐந்து மாத ஊதியத்தை அனாவசியமாக வைத்துக் கொள்ளாதீர்கள் அதை தாருங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.

அமித்ஷா சந்திப்பு

எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல, செங்கோட்டையனும் தான் அமித்ஷாவை சந்தித்து வந்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பிரதமர் மோடியையோ உள்துறை அமைச்சர் அமித்ஷாவையோ சென்று பார்த்து தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய எந்த மாநிலமும் பாதிக்க கூடாது என்பதை வலியுறுத்துவார்.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

தமிழ்நாட்டின் நலனுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணி விரைவில் முடிவாகும் என்று கூறியுள்ளார். இதில், யார் பொய் சொல்கிறார்கள் என்பது விரைவில் தெரியும்.

தூய்மைப் பணியாளர்கள் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருந்தால் ஆண்டிற்கு ஒரு முறை ஒன்றிய அரசின் தணிக்கையும், மாநில அரசின் தணிக்கையும் இருக்கிறது. அதில் தெளிவாக எழுதி விடுவார்கள். அறிக்கை வந்து கொண்டுதான் இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அனைத்துக் கட்சிகளும், 'எங்களுக்கு தி.மு.க தான் போட்டி' என்று கூறுகிறார்கள். அதில் இருந்து ஒன்று மட்டும் நிச்சயம், களத்தில் தி.மு.க மட்டும் நிற்கிறது.

காவலர்களுக்கு பாதுகாப்பு

காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தவறு. உசிலம்பட்டியில் நடந்த பிரச்னை சொந்த பிரச்னை. பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்ட பிரச்னை கிடையாது.

உடனடியாக குற்றவாளியை பிடித்துள்ளோம். அதைத்தான் பாராட்ட வேண்டும். சம்பவம் நடந்தவுடன் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.

அமைச்சர் ரகுபதி

யாரை யார் வெட்ட போகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தகவல் கிடைத்து விட்டால் காப்பாற்றி விடுவோம். தகவல் கிடைக்காத போது குற்றம் நடந்தால் குற்றவாளியை பிடித்து தண்டனை பெற்று தருவோம். சுட்டுவிட்டு தப்பித்து ஓடுபவரை என்ன செய்வது?. சுட்டு தான் பிடிக்க வேண்டி இருக்கிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் என்கவுன்டர் செய்துதான் ஆக வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் தப்பிக்க விட்டு விட்டனர். ஓடவிட்டு விட்டனர் என்று எங்கள் மீது பழி போடுவீர்கள். அனைத்து கட்சிகளும் சேர்ந்து கூட்டணியாக வந்தால்தான் எங்களுக்கும் போட்டி நன்றாக இருக்கும்.

மகாராஷ்டிராவில் மராத்தி மொழி தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும். மராத்தி மொழியில் தான் பேசப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டை பின்பற்றி அங்கேயும் சொல்லி இருக்கிறார்கள்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி - யார்?

பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது .யார் இந்த நிதி தி... மேலும் பார்க்க

`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர் - என்ன ஸ்பெஷல்?

இப்போது மாம்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. விதவிதமான மாம்பழங்கள் மார்க்கெட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது. ஜப்பானில் மட்டுமே விளையக்கூடிய மியாசாகி மாம்பழங்கள் இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் விளைகிறது. உலகின... மேலும் பார்க்க

DOGE ``வந்த வேலை முடிந்துவிட்டது, அதனால்..'' - டிரம்ப் அரசில் இருந்து விலகும் எலான் மஸ்க்?

அமெரிக்க அரசின் செலவைக் குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான DOGE துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் சூசகமாகக் கூறியிருக்கிறார். எலான் மஸ்க் - ட்ரம்ப்... மேலும் பார்க்க

கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சுங்கச்சாவடியின் அவலம்

செப்டம்பர், 2021."சட்டப்படி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை சுற்றி 10 கி.மீ-களுக்கு எந்தவொரு சுங்கச்சாவடிகளும் அமைந்திருக்கக் கூடாது. ஆனால், அந்த சட்டத்தை மீறுவதுப்போல, சென்னசமுத்திரம், நெமிலி, வான... மேலும் பார்க்க

Doctor Vikatan: 10 வயதுக் குழந்தைக்கு பழைய சாதம் கொடுக்கலாமா, அதனால் சளி பிடிக்குமா?

Doctor Vikatan: என்னுடைய மகளுக்கு 10 வயதாகிறது. பெரும்பாலும் காலையில் எதையும் சாப்பிட மறுக்கிறாள். வீட்டில் நானும் என் கணவரும் தினமும் காலையில் பழையசாதம்சாப்பிடுகிறோம். அதையே என் மகளுக்கும்கொடுக்கலாமா... மேலும் பார்க்க

``டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்

"அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன், ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இதுவரை இல்லாத வகையில் குண்டுகளை ஈரான் மீது வீசுவோம்" என்று ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அமெரி... மேலும் பார்க்க