DOGE ``வந்த வேலை முடிந்துவிட்டது, அதனால்..'' - டிரம்ப் அரசில் இருந்து விலகும் எலான் மஸ்க்?
அமெரிக்க அரசின் செலவைக் குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான DOGE துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் சூசகமாகக் கூறியிருக்கிறார்.

அதிபர் ட்ரம்ப் பதவி ஏற்றவுடன் எலான் மஸ்க்கிற்கு அரசு செலவுகளைக் குறைக்கும் DOGE துறை ஒதுக்கப்பட்டது. அதனை நிர்வகித்து வரும் மஸ்க் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். DOGE துறை குறித்து பேசிய அவர், "நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தினசரி $4 பில்லியன் வரை செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
முதல் 130 நாள்களுக்குள் பற்றாக்குறையை ஒரு டிரில்லியன் டாலர்கள் குறைக்கத் தேவையான பெரும்பாலான பணிகளை முடித்துவிட்டோம்.
தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும் முறைகேடுகளைக் கண்டறிந்து நிறுத்துவதும் தான் எங்கள் முதல் நோக்கம். இதற்காகவே நாங்கள் வேலை செய்து வருகிறோம். எங்களின் நடவடிக்கையால் $4 பில்லியன் டாலர் சேமிக்க முடிகிறது.

இதுவரை நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியைத் தருவதாகவே இருக்கிறது. எங்கள் நடவடிக்கை வெற்றி அடையாமல் போனால் அமெரிக்கா கடனில் மூழ்கிவிடும்.
முக்கியமான அரசு சேவைகளையும் பாதிக்காமல் 15 சதவீதம் வரை செலவைக் குறைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். இந்த பணிகளை எல்லாம் முடித்துவிட்டு மே மாதம் நான் DOGE துறையில் இருந்து விலகலாம்" என்று கூறியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
