டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்! ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!
நடிகை டெல்னா டேவிஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆடுகளம் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து பிரபலமானவர் நடிகை டெல்னா டேவிஸ். இதனைத் தொடர்ந்து அன்பே வா தொடரில் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார்.
இத்தொடரில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார் டெல்னா. பின்னர் இத்தொடரில் இருந்து விலகினார்.
கடந்த சில மாதங்களாக எந்த புதிய தொடரிலும் நடிக்காத டெல்னா, சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடரான ஆடுகளம் தொடரில் நடிக்கிறார்.
இத்தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி 4 மாதங்களுக்குப் பிறகு, இத்தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஆடுகளம் தொடர் வரும் ஏப். 7 ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு வாரத்தின் ஏழு நாள்களும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் டெல்னா டேவிஸுக்கு ஜோடியாக மெளன ராகம் -2 தொடர் நாயகன் சல்மானுல் பாரிஸ் நடிக்கிறார். மேலும், பிரதான பாத்திரங்களில் காயத்ரி ஜெயராம், சச்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: பனி விழும் மலர் வனம் தொடர் நிறைவு!