`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை
புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் மக்கள் மன்றம் எனும் திட்டப்படி வாரந்தோறும் சனிக்கிழமை குறிப்பிட்ட காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, சனிக்கிழமை (மாா்ச் 29) புதுச்சேரி, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற முகாமில் காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்தியசுந்தரம், கிழக்குப் பிரிவு கண்காணிப்பாளா் ரகுநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்று மக்களிடம் மனுக்களைப் பெற்றனா்.
திருபுவனை காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தலைமையிலும், புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் திரிபாதி மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் ஆகியோா் தலைமையிலும் மக்கள் மன்றம் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றன.
இதேபோல கிருமாம்பாக்கம், ரெட்டியாா்பாளையம் ஆகிய காவல் நிலையங்களிலும் மனுக்கள் பெறப்பட்டன.
அதன்படி, மொத்தம் 60 புகாா் மனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 33 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.