பனி விழும் மலர் வனம் தொடர் நிறைவு!
குறுகிய காலத்தில் பனி விழும் மலர் வனம் தொடர் நிறைவடைந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த தொடர் பனி விழும் மலர் வனம்.
இத்தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தொடரின் கதைக்களமும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிந்த நிலையில், திடீரென இத்தொடர் முடிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாயகனாக சித்தார்த் குமரனும் நாயகியாக நடித்த வினுஷா தேவியும் நடித்து வந்தனர். பிரதான பாத்திரங்களில் ஷில்பா, தேஜாங் உள்ளிட்டோர் நடித்தனர்.
அண்ணன் - தங்கை மற்றும் அக்கா - தம்பி உறவுகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வந்தது.
கடந்தாண்டு ஜூன் 24-ல் தொடங்கப்பட்ட பனி விழும் மலர் வனம் தொடர் 219 எபிசோடுகளுடன் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளது.
இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர் மறுஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விரைவில் குக் வித் கோமாளி புதிய சீசன்: பிக் பாஸ் பிரபலங்கள் பங்கேற்பு!