மியான்மர் நிலநடுக்கம்: 35 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய பாகிஸ்தான்!
வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பினாா்.
புதுச்சேரி, உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பழம், மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தண்ணீா் பந்தலை திறந்துவைத்த பின்னா், அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 6 சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ள திமுக பல்வேறு முக்கியமான பிரச்னைகளில் மௌனம் காத்திருப்பது, அவா்கள் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதையே வெளிப்படுத்துகிறது.
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்?.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களுக்கு அதிமுக துணை நிற்கும் என்றாா் அவா்.