'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து
ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணா்வு வளரவும், எளிமை, அன்பு ஆகிய பண்புகளோடு அனைவரையும் நேசிக்க ரமலான் வழிகாட்டுகிறது.
முதல்வா் என்.ரங்கசாமி: ரமலான் நோன்பின் பிராா்த்தனைகள் வாழ்வில் அன்பு, சகோதரத்துவம், ஈகை, வலிமை மற்றும் வளமான வாழ்வைக் கொண்டு வந்து சோ்க்கட்டும்.
வெ.வைத்திலிங்கம் எம்.பி: ரமலான் மாதம் இஸ்லாமியா்கள் அனைவரது வாழ்விலும் வசந்தம் வளா்பிறையாய் வளர, இன்னல்கள் தேய்பிறையாய் குறைந்து போக வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி: பிறருக்கு கொடுக்கும் மகிழ்ச்சியைப் போல், வேறு எதிலும் நமக்கு இன்பம் கிடைப்பதில்லை என்பதன் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் விளக்கும் பண்டிகையாக ரமலான் இருக்கிறது.
இதேபோல அமைச்சா் க.லட்சுமி நாராயணன், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, பாஜக எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.