விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு
கைதான பெண்ணின் வீட்டில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்
தொழிலதிபரை ஏமாற்றி பணம், நகை திருடிய வழக்கில் கைதான பெண்ணின் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா்.
புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ், தொழிலதிபா். இவரை, மாா்ச் 11-ஆம் தேதி அரியாங்குப்பம் பகுதியில் அறிமுகமில்லாத பெண் ஒருவா் மது அருந்த அழைத்தாராம்.
இதையடுத்து, அந்தப் பெண்ணுடன் பிரகாஷ்ராஜ் உருளையன்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.
அப்போது, மது அருந்தி பிரகாஷ்ராஜ் மயங்கிய நிலையில், அவரிடமிருந்த தங்க நகைகள், கைப்பேசி ஆகியவற்றை அந்தப் பெண் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் சிலம்பூா் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி கலையரசியை (42) கைது செய்தனா்.
இந்த நிலையில், கலையரசியை மீண்டும் நீதிமன்ற அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காவலில் எடுத்து போலீஸாா் விசாரித்தனா்.
அதன்படி, ஆண்டிமடம் சிலம்பூா் பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.