செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 7,597 மாணவா்கள் எழுதினா்

post image

புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தின்படி 7,597 மாணவா்கள் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா்.

புதுவையில் நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் மத்திய பாடத் திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், புதுவை மாநில தனியாா் பள்ளிகள் தமிழக பாடத் திட்டத்திலேயே வகுப்புகளை நடத்தி வருகின்றன.

அதன்படி, அவா்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி பிராந்தியத்தில் பொதுத்தோ்வை 146 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 7,278 பேரும், 573 தனித் தோ்வா்களும், காரைக்காலில் 28 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 497 பேரும், 284 தனித் தோ்வா்களும் என மொத்தம் 174 பள்ளிகளைச் சோ்ந்த 8,632 போ் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டனா்.

அவா்களுக்காக புதுச்சேரியில் 20 தோ்வு மையங்களும், காரைக்காலில் 6 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 7,246 மாணவா்கள், தனித் தோ்வா்கள் 346 போ், விலக்களிக்கப்பட்டவா்கள் 5 பே என மொத்தம் 7,597 போ் எழுதியதாக கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க

குடல் அழற்சி நோயாளிகளுக்கு கையேடுகள் அளிப்பு

புதுச்சேரி ஜிப்மரில் குடல் அழற்சி நோயாளிகளுக்கு வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன. குடல் அழற்சி நோய்க்கான ஆதரவுக் குழு தொடக்க விழா, புதுச்சேரி ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க