செய்திகள் :

மும்பை: காமெடி ஷோ நடந்த ஸ்டூடியோ மீது தாக்குதல் நடத்திய ஷிண்டே அபிமானி... யார் இந்த ரஹூல் கனல்?

post image

மும்பையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கார் ரோடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்த காமெடி ஷோவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை காமெடி நடிகர் குனால் கம்ரா துரோகி என்று விமர்சித்து மிமிக்ரி பாடல் ஒன்றை பாடினார். அந்த பாடல் வெளியான சிறிது நேரத்தில் காமெடி ஷோ படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவை சிவசேனாவினர் அடித்து உடைத்தனர். அதற்கு கட்சியின் இளைஞரணித் தலைவர் ரஹூல் கனல் தலைமை தாங்கினார். ரஹூலையும், அவருடன் சேர்ந்து ஸ்டூடியோவை அடித்து உடைத்த 11 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஏக்நாத் ஷிண்டே கட்சியில் தற்போது மாநில இளைஞரணித் தலைவராக இருக்கும் ரஹூல் கனல் ஒரு நேரத்தில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அதோடு சிவசேனாவின் சோசியல் மீடியா பொறுப்பாளராகவும் இருந்தார்.

ஆனால் ஏக்நாத் ஷிண்டே 2022ம் ஆண்டு சிவசேனாவை உடைத்துக்கொண்டு வெளியில் சென்றபோது, 2023ம் ஆண்டு ரஹூல் கனல் திடீரென ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்தார். அவருக்கு இப்போது ஏக்நாத் ஷிண்டே சிவசேனா இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்து கௌரவித்து இருக்கிறார். அதோடு ஷீரடி சாய்பாபா அறங்காவலராகவும், மும்பை மாநகராட்சி கல்வி கமிட்டி உறுப்பினராவும் இருக்கிறார். மேலும் நடிகர் சல்மான் கானை கௌரவிக்கும் விதமாக பைஜான் என்ற பெயரில் ஒரு உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மும்பை ஸ்டூடியோவை தாக்கியது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரஹோல் கனல் கூறுகையில், ''இது ஆரம்பம் தான். எங்கள் தலைவர் அல்லது பெரியவர்களுக்கு எதிராக அவதூறாக பேசினால் விட்டு வைக்க மாட்டோம். எப்போது நீங்கள் (குனால்) மும்பைக்கு வந்தாலும் சிவசேனா ஸ்டைலில் பாடம் கற்பிப்போம்'' என்று தெரிவித்தார். ஐ லவ் மும்பை ஃபவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஏக்நாத் ஷிண்டேயை துரோகி என்று சொன்னதற்காக குனால் கம்ரா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வாரணாசி: நவராத்திரியில் சாலையில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து; இறைச்சிக் கடைகளுக்குத் தடை

நவராத்திரி திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம் முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை வரும் திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.இதனால் உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு ப... மேலும் பார்க்க

கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி; வெளியேறிய அமைச்சர்

கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் வேலை நடைபெற்ற வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்கள... மேலும் பார்க்க

`தெற்கின் மேல் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பு...' - உகாதி வாழ்த்துச் செய்தியில் முதல்வர்!

நாளை தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கான புத்தாண்டு விழாவான உகாதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.முதல்வரின் Ugadi வாழ்த்து செய்தி:-திராவிட மொழ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து செங்கோட்டையன்; டெல்லிக்குப் படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பல சிக்கல்களால், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

தவெக: "அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து இன்று பேசியிருக்கிறார். அப்போது, "நேற்று( மார்ச் 28) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பொதுமக்... மேலும் பார்க்க

'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க