MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
கடைசி டி20: 10 ஓவர்களில் வென்ற நியூசிலாந்து..! பாகிஸ்தான் படுதோல்வி!
பாகிஸ்தானுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதில் 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.
இதில் கடைசி டி20 போட்டி இன்று (மார்ச்.26) தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 128/9 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி இந்த இலக்கினை 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
டிம் செய்ஃபெர்ட் 97 ரன்கள் எடுத்து அசத்தினார். ஃபின் ஆலன் 27 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஜிம்மி நீஷம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டிம் செய்ஃபெர்ட் தொடர்நாயகான தேர்வானார்.
4-1 என டி20 தொடரை வென்றது நியூசிலாந்து அணி. அடுத்ததாக ஒருநாள் போட்டிகள் மார்ச்.29ஆம் தேதி தொடங்குகின்றன.
Back-to-back home series wins pic.twitter.com/3y2xOTPmiM
— BLACKCAPS (@BLACKCAPS) March 26, 2025