Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
கைவிடப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேசம் ஒருநாள் தொடர்; காரணம் என்ன?
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. தற்போது, இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதாக இருந்தது. ஆனால், ஒருநாள் தொடர் கைவிடப்பட்டு, தற்போது வங்கதேச அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்!
வங்கதேசத்துக்கு எதிரான இந்த டி20 தொடர் நிறைவடைந்தவுடன் பாகிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.