2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா..!
2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தினை சாம் கான்ஸ்டாஸ், மேத்திவ் குன்னஹ்மேன், பியூ வெப்ஸ்டராகிய 3 இளம் வீரர்கள் இந்தமுறை பெற்றுள்ளனர்.
முக்கியமான வீரர்கள் இருந்தாலும் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டார்களான கூப்பர் கன்னோலி, ஷான் அப்பாட், ஆரோன் ஆர்டி, டாட் மர்பிக்கு இந்த முறை அணியில் இடமில்லை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
வார்னே-முரளிதரன் கோப்பையில் அசத்திய குன்னஹ்மேன் நடுவரால பந்துவீச ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து சட்டப்படி பிரிஸ்பேனில் தன்னை நிரூபித்து மீண்டும் பந்துவீச தயாராகியுள்ளார்.
கடந்த 12 மாதங்களாக சுமாராக விளையாடிய பேட்டர் மாட் ஷார்ட், ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இளம் வீரர்கள் சேர்ப்பு ஏன்?
இது குறித்து ஆஸி. தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி கூறியதாவது:
குன்னஹ்மான் இலங்கையில் சிறப்பாக விளையாடினார். அடுத்த 18 மாதங்களுக்கு இவர் முக்கியமான பங்கினை வகிப்பாரென நாங்கள் நம்புகிறோம்.
பியூ வெப்ஸ்டர் நல்ல டெஸ்ட் ஆல்ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ளார். அது அணிக்கு நல்ல சமநிலையை வழங்கியுள்ளது.
கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் மீண்டும் அணிக்கு வந்திருப்பது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், மே.இ.தீ. உடனான தொடரில் நல்ல ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்.
சாம் கான்ஸ்டாஸ் நம்பிக்கயளிக்கும் இளம் வீரர். மேலும் தன்னை மேம்படுத்திக்கொள்வாரென நம்புகிறோம் என்றார்.
2025-26ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த வீரர்கள்
சேவியர் பர்ட்லெட், ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஷ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மேத்திவ் குன்னஹ்மான், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், லான்ஸ் மாரிஸ், ஜோய் ரிச்சர்ட்சன், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர், ஆடம் ஸாம்பா.
பிஜிடி தொடரில் அசத்திய சாம் கான்ஸ்டாஸ், ஸ்காட் போலாண்ட், பியூ வெப்ஸ்டர் மற்றும் இலங்கை தொடரில் அசத்திய குன்னஹ்மேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Congratulations to Sam Konstas, Matt Kuhnemann and Beau Webster who are all new additions to the men's contract list pic.twitter.com/J1IQE0Y4id
— Cricket Australia (@CricketAus) April 1, 2025