'பட்டிமன்றம் பேசுறதுக்கான தகுதி எனக்கு இல்லேன்னு நம்பினேன்' - பட்டிமன்றம் ராஜா |...
ஆஷஸ் தொடரில் மிட்செல் மார்ஷ் விளையாடுவாரா? ஜியார்ஜ் பெய்லி பதில்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விளையாடுவாரா என்பது குறித்து அந்த அணியின் தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி பேசியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான மிட்செல் மார்ஷ் அண்மைக் காலமாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டிக்குப் பிறகு, முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் அணியிலிருந்து விலகினார்.
இதையும் படிக்க: திட்டங்களை தெளிவாக செயல்படுத்திய மும்பை இந்தியன்ஸ்; பாராட்டிய நியூசி. வீரர்!
காயம் காரணமாக பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ், தற்போது ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவின் டி20 அணிக்கான கேப்டனாக செயல்பட்டு வரும் மிட்செல் மார்ஷ், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடி வரும் மிட்செல் மார்ஷ், மிக முக்கியமான ஆஷஸ் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஜியார்ஜ் பெய்லி பதில்
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான எங்களது திட்டத்தில் மிட்செல் மார்ஷும் இருக்கிறார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிட்செல் மார்ஷின் சிவப்பு பந்து போட்டிகளுக்கான பயணம் முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடாததாக நான் நினைக்கவில்லை. அவரிடம் அபார பேட்டிங் திறமை இருக்கிறது. அவரால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும்.
இதையும் படிக்க: மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!
இங்கிலாந்து அணி விளையாடும் விதத்தைப் பாருங்கள். அவர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் திறன் மிட்செல் மார்ஷிடம் இருப்பதாக நினைக்கிறேன். ஆஷஸ் தொடரின்போது, ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் மிகவும் உதவியாக இருப்பார் என்றார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.