ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்குள் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளன. இந்த தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர்கள் அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் முதலில் தொடங்குகிறது. அதன் பின், டி20 தொடர் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: இந்திய அணிக்கு எதிராக ஒளிந்துகொள்ள இடம் கிடையாது; ஜோ ரூட் சொல்வதென்ன?
ஒருநாள் தொடர் விவரம்
முதல் ஒருநாள் - அக்டோபர் 19, பெர்த்
இரண்டாவது ஒருநாள் - அக்டோபர் 23, அடிலெய்டு
மூன்றாவது ஒருநாள் - அக்டோபர் 25, சிட்னி
11 cities. 26 matches. Three visiting nations up for the challenge.
— Cricket Australia (@CricketAus) March 30, 2025
Cricket is everywhere this summer. And you need to see it! pic.twitter.com/FZOm1PGj0X
டி20 தொடர் விவரம்
முதல் டி20 - அக்டோபர் 29, கேன்பெரா
2-வது டி20 - அக்டோபர் 31, மெல்போர்ன்
3-வது டி20 - நவம்பர் 2, ஹோபர்ட்
4-வது டி20 - நவம்பர் 6, கோல்ட் கோஸ்ட்
5-வது டி20 - நவம்பர் 8, பிரிஸ்பேன்