29 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற தெற்கு ஆஸ்திரேலியா!
ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப்பை மாதிரி பிரபலமான தொடரகும்.
இந்தத் தொடரில் ஆஸி.யின் 6 மாகாணங்களில் இருந்து அணிகள் விளையாடும். 10 போட்டிகளில் இந்த அணிகள் விளையாடும்.
இதன் இறுதிப் போட்டிகளில் தெற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லான்ட் அணிகள் மோதின.
இதில் குயின்ஸ்லான்ட் முதலிரண்டு இன்னிங்ஸ்களில் 95, 445 ரன்கள் எடுத்தது. தெ.ஆஸி. முதலிரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 270, 271/6 ரன்கள் எடுத்தது.
இதில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 11 விக்கெட்டுகள் எடுத்த பிரன்டன் டாகெட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் கோப்பையை 29 ஆண்டுகள் கழித்து தெற்கு ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
இந்த அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி. பிஜிடி தொடரில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடியவர்.
இந்த அணியில் விக்கெட் கீப்பர் அலெக்ச் கேரியும் ஜேசன் சங்காவும் சதமடித்து அசத்தினார்கள்.
கடைசி இன்னிங்ஸில் 269 ரன்களை சேஸ் செய்து வரலாற்று வெற்றது தெற்கு ஆஸ்திரேலியா.
இதற்கு முன்பாக 1990-1991இல் 232/2 ரன்களை சேஸ் செய்து விக்டோரியா அணி கோப்பையை வென்றிருந்தது.
A vision realised. A legacy defined.
— South Australia Cricket Teams (@SACricketTeams) March 29, 2025
We are your 2024/25 Sheffield Shield champions! pic.twitter.com/ZCwjIB3vif