பரமக்குடி அருகே ஆண் உடல் மீட்பு
பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கள்ளிக்கோட்டை வைகை ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற போலீஸாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.