Doctor Vikatan: இளநரைக்கு ஹென்னா உபயோகித்தால், சருமத்தில் கருமை உண்டாகுமா?
ராமநாதபுரத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்கக் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு (பஅசஊஉஈ) மூலம் கூட்டுறவுச் சங்கங்களின் வழியாக விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வேளாண் இடுபொருள்களை அரசு வழங்குகிறது. மேலும், இந்த விலைப் பொருள்களை சேமித்து, விநியோகித்து சந்தைப் படுத்தும் பணியை இந்தக் கூட்டமைப்பு மேற்கொள்கிறது. இந்தக் கூட்டமைப்பு சிவகங்கை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
ராமநாதபுரத்தில் இந்தக் கூட்டமைப்பு இல்லாததால், இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று பெற வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ராமநாதபுரம் மாவட்டச் செயலா் முத்துராமலிங்கம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 3 லட்சம் ஏக்கரில் நெல், ஒரு லட்சம் ஏக்கரில் பருத்தி, 50 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், சிறுதானியப் பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்கான உரம், பூச்சி மருந்து, வேளாண் இடுபொருள்களை ஆண்டுதோறும் இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்கள் சிவகங்கையில் உள்ள கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அலுவலகத்துக்கு சென்று வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது.
எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அலுவலகத்தை அமைக்க தமிழக அரசு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.