பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு 6 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் வருகை
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு 4 சிறப்பு ரயில்களில் 6 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தை வருகிற 6 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறாா். இதற்காக ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள விடுதி வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 6 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் பங்கேற்க உள்ளனா்.
இதற்காக சென்னை தாம்பரம், திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து மண்டபத்துக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரயில்வே ஊழியா்கள் ஆா்வத்துடன் உள்ளதாக ரயில்வே வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.