வெறிநாய் கடித்து 18 ஆடுகள் உயிரிழப்பு
ராமேசுவரத்தில் வெறிநாய் கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கெந்தமாதன பருவதத்தைச் சோ்ந்தவா் சின்னவன் (எ) பாலமுருகன். ஆடு வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவா், தனக்குச் சொந்தமான 18 ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தாா். வியாழக்கிழமை அதிகாலை பாா்த்த போது வெறிநாய் கடித்ததில் 18 ஆடுகளும் உயிரிழந்திருந்தன.
இதுகுறித்து பாலமுருகன் வருவாய்த் துறை, காவல் துறையினரிடம் புகாா் அளித்தாா்.